தமிழக விவசாய நிலங்களை வாங்க ஆர்வம் காட்டும் இலங்கை அரசு!  

தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை வாங்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாய நிலங்களை வாங்க ஆர்வம் காட்டும் இலங்கை அரசு!   

தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை வாங்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் மதுரை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களைகளிடம் கூறுகையில் "தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை இலங்கை அரசு வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது, முதல்கட்டமாக இலங்கை அரசு கோத்தாரி நிறுவனத்துக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளை இலங்கை அரசு வாங்க முயற்சி செய்து வருகிறது என்றார்.

இலங்கை அரசு தமிழக நிலங்களை வாங்கும் முயற்சி குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும், உசிலம்பட்டி 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியீட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபடி மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்தால் தென் தமிழகம் மற்றும் மத்திய மண்டல விவசாய பகுதிகள் வளர்ச்சி வளர்ச்சி பெறும், முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் மதுரையில் குடியிருந்தற்கான சான்றுகள் ஏதுமில்லை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் இடத்தில் பென்னி குயிக் குடியிருந்தார் என தவறான தகவல் கூறப்படுகின்றது,

பென்னி குயிக் தேக்கடி, அனுமந்தன்பட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து உள்ளார், பென்னி குயிக் வாழ்ந்த இடங்கள் குறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது, தேவைப்படும் பட்சத்தில் ஆவணங்களை வெளியீடுவோம்" என கூறினார்