தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: விஜயகாந்த் கடும் கண்டனம்

தமிழக  மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசின் அறிவிப்பு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும். இலங்கை அரசின் இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.