"நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பாஜக ஏற்றுக்கொண்டது" முதலமைச்சர் ஸ்டாலின்!!

Published on

நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி., எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வளைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஒப்புக்கொண்டது என்றும், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் மேற்படிப்பில் சேரலாம் என்று அறிவிப்பின் மூலம் நீட் தேர்வு அர்த்தமற்றது என அவர்களே ஒப்புக்கொண்டனர் என்றும் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

பயிற்சி மையம் மற்றும் கட்டணத்திற்கான சம்பிரதாயமாக நீட்,  மாறிவிட்டது என்றும், உண்மையான தகுதிக்கான அளவுகோல் நீட் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியும், மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தத்துடன், நீட் என்று ஆயுதத்தால் பல உயிர்களைக் கொன்ற பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்றும் காட்டத்துடன் குறிப்பிட்டள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com