திமுக ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரியல்ல என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை செனாய் நகரில் நடைபெற்ற நீட் விலக்கு நம் இலக்கு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணா பெரியார், கருணாநிதி வகுத்த பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கூறினார்.
இந்தியாவிற்கு எதிரானது பாஜக என்றும் வாட்ஸப், பேஸ் புக் , டிவிட்டர் மூலம் பாஜக வதந்தி பரப்பி வருவதாக சாடினார். கோயிலும் பக்தியும் அவரவர் உரிமை, என்றும் கோயில்கள் கொடியவரின் கூடாராமாக மாறிவிடக் கூடாது என்ற கலைஞரின் வசனம் தான் அவர்களுக்கு பதில் என முதலமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும் திமுக ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரியல்ல என்றும் ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் தெரிவித்தார்.