இந்திய அளவில் நடைமுறைபடுப்பத்திய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்....!!

இந்திய அளவில் நடைமுறைபடுப்பத்திய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்....!!

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எவ்வாறு செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதற்கு பேசிக்கொண்டிராமல் அதை செய்து காட்டியவர் முதலமைச்சர்.  

பொதுக்கூட்டம்:

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  அதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

சாத்தியமான பயணம்:

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எவ்வாறு செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்கள் எனவும் ஆனால் அதற்கு பேசிக்கொண்டிராமல் அதை செய்து காட்டியவர் முதலமைச்சர் எனவும் கூறியுள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.  இதற்கு 1600 கோடி ரூபாய் ஓராண்டுக்கு செலவாகும் எனவும் கடந்த இரண்டு ஆண்டில் 3200 கோடி ரூபாய் மானியமாக தமிழக அரசு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்.

இந்தியா அளவில்:

மேலும் கடந்த 24 மாதங்களில் 248 கோடி இலவச மகளிர் பயணங்கள்  நடைபெற்றுள்ளது என்று கூறிய அவர் இதனை இந்தியா அளவில் நடைமுறைபடுப்பத்திய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியால், 2400 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளோம் எனவும் 1996 ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்தார் என தெரிவித்த அமைச்சர் அதனை 50 சதவீதமாக மாற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் கூறினார்.

அரியலூரிலும்:

மேலும் சென்னை மாநகராட்சியில் 200 வார்டில் 102 பேர் பெண்கள் உள்ளனர் எனவும் மகளிர் மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரியலூர் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அரியலூரில் 700 படுக்கையுடன் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் இனிமேல் மக்கள் மருத்துவத்திற்காக அருகில் உள்ள தஞ்சாவூர் மருத்துவமனைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:    நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்... விரைவில்!!