ஸ்டேன் சாமி ஒரு நக்சல்,.தமிழக அரசும் நக்சல்களை ஆதரிக்கிறது.! இந்து முன்னணி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.!  

ஸ்டேன் சாமி ஒரு நக்சல்,.தமிழக அரசும் நக்சல்களை ஆதரிக்கிறது.! இந்து முன்னணி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.!  
Published on
Updated on
1 min read

தற்போது நக்சல்களுக்கும், பயங்கரவதிகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தற்போதைய தமிழக அரசு செயல்படுகிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்து முன்னணி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்,

 இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியன், "தற்போது நக்சலைட் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. ஸ்டேன் சாமி என்ற ஒரு நக்சலைட்   இறப்புக்கு அரசு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மரியாதை செய்தது  வன்மையாக கண்டிக்கதக்கது, தமிழகத்தில் பங்களாதேஷ் நக்சல்கள், மற்றும் முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுறுவி உள்ளனர், நக்சல்களையும், முஸ்லிம் பயங்கரவாதிகளையும் தமிழக உளவுதுறை கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், "தற்போது நக்சல்களுக்கும், பயங்கரவதிகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தற்போதைய தமிழக அரசு நடக்கிறது. அதோடு நக்சல்களுக்கு மேலும் வலு சேர்ப்பது போல தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளது, கொங்கு நாடு விசயத்தில் இந்து முன்னணிக்கு உடன்பாடு இல்லை,  தமிழகம் ஒற்றுமையாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com