ஊருக்குள் வரமறுத்து பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசுப்பேருந்து நடத்துனர்! வைரலாகும் வீடியோ

ஊருக்குள் வர மறுத்த பேருந்து நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊருக்குள் வரமறுத்து பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசுப்பேருந்து நடத்துனர்! வைரலாகும் வீடியோ
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு வருவதற்காக இரண்டு பயணிகள் நின்று கொண்டு இருந்த நிலையில் வள்ளியூர் பஸ்ஸ்டாண்டிற்கு போடி நோக்கி செல்லும் அரசு பேருந்து வந்தது, அதில் ஏறிய பயணியிகள் நாங்குநேரி செல்வதற்காக நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

அப்போது நாங்குநேரி ஊருக்குள் வர அனுமதி இருந்தும் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமல் நாங்குநேரி புறவழிச்சாலை செல்வதாகவும், பொதுமக்கள் சேவைக்காக நாங்கள் பேருந்தை ஓட்டவில்லை எங்கள் இஷ்டப்படி தான் பேருந்தை ஒட்டுவோம் என்றும், அரசுக்கு வருவாய் வந்தால் என்ன? வரவில்லை என்றால் எங்களுக்கு என்ன?எங்க மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்? முடிந்தால் என்மீது நடவடிக்கை எடுப்பாய் என்று நடத்துனர் அந்த பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து அந்த பயணிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்ததை தொடர்ந்து அந்த பேருந்து நாங்குநேரி ஊருக்குள் வந்து அந்த பயணிகளை இறக்கிவிட்டது, ஆனாலும் அங்கு நின்ற பயணிகளை ஏற்றாமல் அங்கிருந்து வேகமாக சென்றது.

இதனால் பொதுமக்களின் சேவை குறைபாடு அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கடந்த அதிமுக., ஆட்சியில் அரசு போக்குவரத்து முறையாகவும் சரியாகவும் செயல்பட்டதாகவும் தற்போது நடக்கும் திமுக., ஆட்சியில் போக்குவரத்து துறையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஓட்டுனர், நடத்துனர் தங்கள் இஷ்டத்துக்கு பேருந்து இயக்குவதாகவும் தற்போது நடக்கும் விடியல் ஆட்சியில் நாங்குநேரிக்கு விடியாத நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com