மாநில அளவிலான மருத்துவர்கள் கருத்தரங்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்..!

மாநில அளவிலான மருத்துவர்கள் கருத்தரங்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்.
Published on

கவனக்குறைவால் நேர்ந்த மரணம்

கால்பந்தாட்ட வீராங்கனை மாணவி பிரியா கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மருத்துவர்கள் என ஐந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் தவறு எதுவும் இல்லை மருத்துவர்களின்  கவனக்குறைவு காரணமாக தான் மரணம் ஏற்பட்டது என்று சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.


அமைச்சர் தலைமையில் கருத்தரங்கம்

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கருத்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தார். 

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கக்கூடிய அறுவை சிகிச்சை செய்ய கூடிய நிபுணர்கள், வட்டார, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

மேலும் இந்த கருத்தரங்கில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், அதன் அவசியம், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட இருக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com