80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையங்க்ள் விரைவில்...!!

80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையங்க்ள் விரைவில்...!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் 150 கோடி ரூபாய் மதிப்பில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.  மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தொழில் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரமிக்க பயிற்சி வழங்கப்படும் எனவும் இதற்காக 120 கோடி ரூபாயில் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  பட்ஜெட்2023: பள்ளிக்கல்வித்துறை-  இந்துசமய அறநிலைத்துறை பள்ளிகளும் !!!