ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீராவி என்ஜின்கள்..! சிறப்பாக நடந்த வழியனுப்பு விழா..!

ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீராவி என்ஜின்கள்..! சிறப்பாக நடந்த வழியனுப்பு விழா..!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட வேகன்கள் மற்றும் நீராவி என்ஜின்கள் வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா பங்கேற்று முற்றிலும் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரூ.9.3 கோடியில் புதிதாக தயாரிக்கப்பட்ட விறகு கரிக்கு மாற்றாக ஹை ஸ்பீடு டீசல் கொண்டு இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட நீலகிரி நீராவி என்ஜினையும், வேகன்களுடன் இணைக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட 660வது டீசல் என்ஜினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொன்மலை ரயில்வே பணிமனைகளில் வருடாந்திர ஆய்வினையும் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு வாய்ந்த நீராவி ரயில் இன்ஜினை தயாரித்த ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். வந்தே பாரத் திட்டம் தமிழகத்தில் தொடங்குவதற்கு சில காலம் ஆகும், அனேகமாக நடப்பு நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் தேவைக்கேற்ப வருகிற 31 ஆம் தேதி கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் மூன்று ரயில்கள் அக்டோபர் மாதத்திலும் ஒரு ரெயில் நவம்பர் மாதத்திலும் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மற்ற ரயில்வேக்களைக் காட்டிலும் தெற்கு ரயில்வே மட்டுமே பாரத் கவுரவ் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.