6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 6 மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவ கல்லூரி:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரேடியோ கதிர் இயக்கவியல் துறை தரம் உயர்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். 

தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  புதிய மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மண்டவியாவை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், இம்மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் எனவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com