முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்வில் கல் எரிந்த சம்பவம் - 10 வயது சிறுவனிடம் விசாரனை

முதலமைச்சர் பிறந்தநாள்  நிகழ்வில் கல் எரிந்த சம்பவம் - 10 வயது சிறுவனிடம் விசாரனை

சேகர் பாபு தலைமையில் முதல்வர் பிறந்தநாள் 

நேற்று மாலை தி.மு.க கட்சியின் சார்பில் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள லட்சுமி மண்டபத்தில் முதல்வர் பிறந்த நாள் விழாவானது அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரண்டு முறை டைல்ஸ் கல் வந்து நிகழ்ச்சியில் அரங்கில் விழுந்துள்ளது. இரண்டாவது முறையாக பறந்து வந்த கல் தி.மு.க கட்சியில் சென்னை கிழக்கு மாவட்டம் மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா சுரேஷ்(39) மீது விழுந்தது. 

மேலும் படிக்க | ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இதில் பிரியா சுரேஷ்க்கு வாயில் வலது பக்கம் ஒரு பல் உடைந்தும், மற்றொரு பல் ஆடும் நிலையிலும், மூக்கின் மேல் காயமும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும் படிக்க | நில ஒதுக்கீடு ஊழல்... அமைச்சர் பெரியசாமிக்கு தண்டனை?

10 வயது சிறுவனிடம் விசாரணை

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் 10 வயது சிறுவன் உடைந்த டைல்ஸ் கல்லை எறிந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.