கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் கடும் நடவடிக்கை...!!

கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டினால் கடும் நடவடிக்கை...!!

சென்னை சேத்துப்பட்டில் குப்பை மூலம்  சி.என்.ஜி கேஸ்  தயாரிக்கப்படும் ஆலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்க்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,  சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 டன் குப்பைகள் வருகிறது எனவும் இவற்றுள் முதற்கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட சி.என்.சி கேஸ் ஆலை மற்றும் மாதவரத்தில் இயற்கை எரிவாயு ஆலை மூலம்‌ உரங்கள் தயாரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் குடியிருப்புகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் நேரடியாக கொள்முதல் செய்து சேத்துப்பட்டு ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்  2500 மெட்ரிக் டன் தான் குப்பை இருந்தது எனவும் தற்போது மொத்தம் 5000 மெட்ரிக் டன் சென்னையில் தினந்தோறும் குப்பைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் அவை அனைத்தையும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் கொட்டக்கூடிய நிலைமை இருந்தது வருகிறது எனவும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைகளை  படிப்படியாக எடுத்த அவை முற்றிலும் பசுமை பூங்காக்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் பேசினார்.

மேலும் பெருங்குடியை மீண்டும் தூய்மையான பகுதியாக மாற்றி அமைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ எனவும் நம்ம ஊரு நம்ம குப்பை என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கட்டிட கழிவுகளை  காண்ட்ராக்டர்கள் சாலையில் கொட்டினால் அவர்களுடைய இயந்திரம் மற்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணைய ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com