உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் .. வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கிய முதல் அட்மின்கள் கைது!!

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் .. வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கிய முதல் அட்மின்கள் கைது!!

கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை அடுத்து அவருக்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கிய முதல் அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப் குழு:

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுவதாக இளைஞர்கள் மத்தியில் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியவர்களை தேடி வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு நபர்களை சேர்க்கப்பட்டு கலவரத்திற்கு ஆட்களை சேர்க்கும் வகையில் ஈடுபட்ட வாட்ஸ் அப் குழுவினரை அவர்கள் கண்டுபிடித்தனர்.

குழுவின் முதல் அட்மின்:

கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மணி மகன் விஜய் மற்றும் மற்றொரு குழுவின் முதல் அட்மின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் துரைப்பாண்டி ஆகிய இரண்டு பேரையும் சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ் அப் குழுக்களின் லிங்?:

அதே போல வாட்ஸ் அப் குழுக்களின் லிங்குகளை பல்வேறு இளைஞர்களுக்கு அனுப்பி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மேலும் கணியாமூர் பள்ளி கலவரம் வழக்கில் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கலவரத்திற்கு வந்தவர்களை அடையாளம் கண்டு செல்போன் டவர்கள் மூலம் அவர்களை கைது செய்து வருகின்றனர்.