புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் அமல்படுத்த போராட்டம்!!!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் அமல்படுத்த போராட்டம்!!!

ஊதியத்தை உச்சவரம்பாக முப்பது சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப ஓய்வு ஊதியத்தை உச்சவரம்பாக முப்பது சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் முன்பு எல் ஐ சி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப ஓய்வு ஊதியம்  30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதுபோல புதிய பென்ஷன் திட்டத்தில்  இணைந்திருக்கக் கூடிய ஊழியர்களுக்கு அந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் அமல்படுத்தி இருக்கும் 10% இருந்து 14 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும்  தர்ணா போராட்டம் டெல்லியில் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் இருக்கக்கூடிய எல்ஐசி மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் முன்பாக  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். 

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம்  உயர்த்தலாம் என்று எல்.ஐ.சி  நிர்வாக முடிவெடுத்தும்  மத்திய அரசு அதை தடுக்கிறது எனவும் சின்ன சின்ன விஷயங்களுக்கு மத்திய அரசு இது போன்ற செயல்களை செய்வதை மிகவும் கண்டிக்கிறோம் எனவும் கூறியதோடு எங்களது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம்  நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிக்க:    106 கோடி ரூபாயில் 2 வெள்ள தணிப்பு பணிகள்....!!!