
நெல்லை கரைச்சுத்துபுதூர் பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி என்பவரின் மகள் ஷர்லி பிரமில்டா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததால் எந்த ஒரு கட்டணமும் வேண்டாம் என்ற அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஹாஸ்டல் கட்டணம், செமஸ்டர் ஃபீஸ் ஆகியவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் பணம் கேட்டதாக தெரிகிறது.
இதனிடையே கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா தன்னுடன் செல்போனில் பேசினால் கல்லூரிக்கான பீஸ் கட்டவேண்டிய அவசியம் இல்லை என கூறி மாணவியை தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து கூறியபோது கல்லூரி முதல்வரும், அவரது உதவியாளரும் மாணவியை தகாத வார்த்தைகளில் திட்டினர். இதனால் மனமுடைந்த மாணவி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் படுகாயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.