ஆளுநருக்கு எதிராக மாணவர் இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் ....!

ஆளுநருக்கு எதிராக மாணவர் இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் ....!

சென்னை, கிண்டியில் தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அளிக்கும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் போக்கை கண்டித்து தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம்.எச். அசன் மௌலானா, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. மா. சின்னதம்பி, சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., திரு. நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என். ரவி

இந்த ஆர்ப்பாட்டத்தில், " நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழ்நாட்டு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்" , "ஒன்றிய அரசின் ஆதிக்கத்தால் தமிழ்நாடு மாணவர் உரிமைகள் பறிபோகும்", "தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை",  "நீட் தேர்வை ரத்து செய்..!"  . "தேசிய கல்வி கொள்கையை திணிங்காதே"   போன்ற கோஷங்களை எழுப்பினர். 

மேலும், பல்கலைக் கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க     | அமித்ஷாவும், மின் தடையும் : மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!