வகுப்பறையை சுத்தம் செய்யும் மாணவா்கள்; வீடியோ வைரல்

வகுப்பறையை சுத்தம் செய்யும் மாணவா்கள்; வீடியோ வைரல்

சென்னை திருமுல்லைவாயல் அருகே அரசு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை மாணவா்கள் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சோழம்பேடு பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவா்கள் சிலா் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை துடைப்பம் மூலம் சுத்தம் செய்தனா். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோாிக்கை எழுந்துள்ளது.