தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து...பெற்றோர் முற்றுகை!!

தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து...பெற்றோர் முற்றுகை!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே தனியார் பள்ளியை 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குன்றத்தூர் அடுத்த கோவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து, காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்களுக்கு தாமதமாக தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியின் தாளாளரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இதுபோன்ற விபத்துகள் ஏற்படக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க || "கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர்!!