பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ரகளை....எச்சரித்த போலீஸ்

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ரகளை....எச்சரித்த போலீஸ்

சென்னையில் ஒடும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Published on

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் அரசு மாநகர பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் அரட்டை அடித்துக்கொண்டு பயங்கர சத்தத்துடன் முககவசம் அணியாமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர்.

மாணவர்களின் இச்செயலை கண்ட ஓட்டுநர்களும் நடத்துனரும்  மாணவர்களை  பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாமல் மீண்டும் மீண்டும் சப்தமிட்டு  பயணிகளை எரிச்சல் படுத்தினர்.

இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகில் இருந்த காவலர்களின் அருகே  பேருந்தை நிறுத்தி  மாணவர்களை பற்றி போலீசாரிடம்  நடத்துனர் கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர்  போலீசார் கல்லூரி மாணவர்களை பேருந்தை விட்டு கீழே இறக்கி அடையாள அட்டையை பறிமுதல் செய்து மாணவர்களை  காவல் நிலையத்திற்கு  வரும்படியும், பிறகு  பெற்றோர்களிடம்  கூறி  மாணவர்களை  அறிவுறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com