மீண்டும் மெரினாவில் மாணவர்கள் போராட்டம்? - சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பரபரப்பு

செமஸ்டர் தேர்வுகளை இணைய வழியில் நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுத அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இரு வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான மாணவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் உள்ள நம்ம சென்னை பகுதியில் மாணவர்கள் பெருமளவில் கூடி போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், கடற்கரைக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்ட நம்ம சென்னை பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மாணவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.