ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்...!

ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்...!

நீலகிரி  மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மைகாலங்களாகவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் படியில் தொங்கியவாறே பயணம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விபத்தானது ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தான் வருகிறது. இதுபோன்ற ஒரு வீடியோ தான் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : உணவு தட்டுடன் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...!

நீலகிரி உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆபத்தை உணராமல் பேருந்து படியில் நின்றுக்கொண்டு தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எனவே, சம்மந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.