சென்னையிலிருந்து  சீரடி செல்லும் விமானம் திடீரென  ரத்து... 183 பயணிகள் விமானநிலையத்தில் தவிப்பு

சென்னையிலிருந்து  சீரடி செல்லும் விமானம் திடீரென  ரத்து செய்யப்பட்டதால், அதிா்ச்சியடைந்த  பயணிகள் கவுண்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதங்கள் செய்தனா்.

சென்னையிலிருந்து  சீரடி செல்லும் விமானம் திடீரென  ரத்து... 183 பயணிகள் விமானநிலையத்தில் தவிப்பு

சென்னையிலிருந்து சீரடிக்கு செல்லும் விமான சேவைகள் கடந்த 19 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் ஓய்ந்து வருவதால்,சென்னையிலிருந்து கடந்த 10 ஆம் தேதி முதல் சீரடிக்கு மீண்டும் ஒரு நாளுக்கு ஒரு  விமான சேவை  தொடங்கி நடந்து வருகின்றது.

அதைப்போல் இன்று பகல் 2.15 மணிக்கு சென்னையிலிருந்து சீரடி செல்லவிருந்த விமானத்தில் 183 பயணிகள் பயணிக்கவிருந்தனா். பயணிகள் அனைவரும் போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு,பாதுகாப்பு சோதனைக்கு தயாராக இருந்தனா்.ஆனால் பகல் 1.30 மணியாகியும் பாதுகாப்பு சோதனை தொடங்கவில்லை.

இதையடுத்து விமானநிறுவனம் திடீரென விமானம் இன்று ரத்து செய்யப்படுகிறது. நாளை விமானம் சீரடிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த  பயணிகள் கவுண்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதங்கள் செய்தனா்.

சீரடியில் மோசமான வானிலை நிலவுவதாக வந்த தகவலையடுத்து விமானம் பாதுகாப்பு  கருதி ரத்து செய்யப்படுகிறது. நாளை விமானம் புறப்பட்டு செல்லும்,அந்த நேரம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். நாளை பயணிக்க விருப்பம் இல்லாதவா்கள்,டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனா்.

பயணிகள் வாக்குவாதங்கள் செய்து பாா்த்துவிட்டு,பின்பு சிலா் டிக்கெட்டை கேன்சல் செய்தனா்.பலா் நாளை பயணிப்பதாக கூறி சென்றனா்.இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.