புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்...

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி.

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்...

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, கடந்த வியாழக்கிழமை முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  புதிய அரசின் முதல் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார்.

அதன்பின் அன்று மாலை 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து  மானியக் கோரிக்கைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று  புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.