ஒரு கரும்பின் விலை இது தான்...இந்த தேதியில் தான் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்...அமைச்சர் சொன்ன பதில்!

ஒரு கரும்பின் விலை இது தான்...இந்த தேதியில் தான் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்...அமைச்சர் சொன்ன பதில்!

பொங்கல் பாிசு தொகுப்புக்கான கரும்புகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பரிசு தொகுப்பு:

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரிசு தொகுப்பிற்காக 2 ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 2 கோடி பேருக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.

வீடு தேடி டோக்கன்:

இந்நிலையில் பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன்கடைகளில் குவிவதைத் தடுக்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல...முதலில் எம்.ஜி.ஆர்...பிறகு ரஜினிகாந்த்...இப்போ...சீமான் பரபரப்பு அறிக்கை!

அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 550 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கனை ஊழியர்கள் வழங்கினர். மேலும் நாளொன்றுக்கு 350 பேர் வீதம் பொங்கல் தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கொள்முதல்:

அதனை தொடர்ந்து சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் மற்றும் தரம் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை இடைத்தரகர்கள் யாரும் இன்றி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும், அதற்காக 17  மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

எந்த தேதியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்:

தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பினை வருகிற 9 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும், அதைத்தொடர்ந்து 10, 11, 12 ஆம் தேதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும், 13 ஆம் தேதி வாங்காதவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.