தேர்வில் பிட் அடித்த மாணவன்...வார்னிங் செய்த டீச்சர்...மன உடைச்சலில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை !!

தேர்வில் பிட் அடித்ததை பார்த்து ஆசிரியர் மாணவனை கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.
தேர்வில் பிட் அடித்த மாணவன்...வார்னிங் செய்த டீச்சர்...மன உடைச்சலில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை !!
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் உடுமலை  பகுதியில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் ஒருவனாக 
கலைச்செல்வன் என்ற மாணவன் அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.

இந்நிலையில் கலைச்செல்வன்  நேற்று நடந்த வகுப்பு தேர்வில் பிட் அடித்ததாகவும், அதனை பார்த்த ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து ஆசிரியர் தன்னை சக மாணவர்கள் முன்னிலையில் திட்டி விட்டார்களே என்ற மன உடைச்சலில் இருந்த மாணவன் பள்ளியின் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். 
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com