சமத்துவ பொங்கல் விழா...நடனம் ஆடிய காவல் கண்காணிப்பாளர்...!

சமத்துவ பொங்கல் விழா...நடனம் ஆடிய காவல் கண்காணிப்பாளர்...!

உதகையில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நடனமாடி காவலர்களை உற்சாகப்படுத்தினார்.

சமத்துவ பொங்கல் விழா :

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையும் படிக்க : வாரிசு வெற்றி... படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட இரகசிய விருந்து...அதுவும் எங்கே தெரியுமா?

நடனமாடி அசத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் :

அப்போது, விழாவில் அனைத்து காவலர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நடனம் ஆடியபடி மேடைக்கு வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அதேசமயம்  காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.