மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு...! வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை...!

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு மூன்றாவது முறையாக 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு...! வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை...!

கர்நாடகா, காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடங்கிய நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தண்ணீரானது அணைக்கு 40,000 கன அடியிலிருந்து அதிகரித்து தற்போது 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 16 கண் மதகு வழியாக உபரி நீர், 27,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால் ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான  120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது.