தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்... தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவிக்கு யாரை நியமிப்பார்கள் என்று நம்மக்கள் இதற்கு முன் இத்தனை ஆர்வமாக விவாதித்தது கிடையாது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சைலேந்திரபாபு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்... தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Published on
Updated on
1 min read
தமிழக டிஜிபி திரிபாதி, வரும் 30 ஆம் தேதி பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். இதனால் புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. டெல்லி யூபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
 சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி திரிபாதிக்கு அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாக எம்.கே. ஜா, சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதிப் வி பிலிப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் 60 வயதை எட்டியதால் எம்கே ஜா ஜுலை மாதமும், பிரதீப் பிலிப் செப்டம்பர் மாதமும் ஓய்வு பெறுகின்றனர்.
சைலேந்திரபாபு, கரன்சின்ஹா அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் இந்த இருவரும் சீனியாரிட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். சஞ்சய் அரோரா 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். சென்னையில் உயர் பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போதைய சூழலில், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரில் ஒருவர் தமிழ்நாடு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான சூழலில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com