ஃப்ளோர் பாலில் சாதனை! திரிஷாவிற்கு பாராட்டு விழா!

திருப்பத்தூரில் இந்திய அளவில் தரைவழிபந்து விளையாட்டில் முதலிடம் பெற்று சாதனை படைத்த பெண்ணை கௌரவிக்க கிராம மக்கள் ஒன்றிணைந்து விழா நடத்தினர்.

ஃப்ளோர் பாலில் சாதனை! திரிஷாவிற்கு பாராட்டு விழா!

திருப்பத்தூர்: பல்லாலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் ராஜாத்தி மகளான திரிஷா வயது 19 இவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் சிறு வயதில் இருந்து விளையாட்டுத்துறையில் தனி கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அவருடைய பெற்றோர்கள் செயல்பட்டதால் அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தரைவழி பந்து (FloorBall) விளையாட்டில் ஃபர்ஸ்ட் நேஷனல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | சிலம்பத்தில் 173 மாணவர்கள் உலக சாதனை முயற்சி!

மேலும் இவர் பிரிஜோ பேன்டார்ஷ் குழு கார்நாடகா சார்பில் 13 முறை நேஷனல் குழுவில் இணைந்து விளையாடி 3 முறை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பஞ்சாபில் நடைபெற்ற தரைவழிப் பந்து (FloorBall) போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பை வென்றுள்ளார்.

இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் பல்லாலப்பள்ளி கிராமத்தில்  கிராம மக்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி விழாவாகவும் கொண்டாடினர். இதில் ஊர் பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | முதலிடம் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி சாதனை..! குவியும் வாழ்த்துகள்..!

மேலும் இது குறித்து திரிஷா கூறுகையில்,"தற்போது நேஷனல் அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். மேலும் தான் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் பெற்று கொடுப்பதே இலட்சியம்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கோலாகலமாக துவங்கிய 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள்.. பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!