தமிழ்நாட்டின் சாலைகளில் இனி பிங்க் பேருந்துகள்; மகளிருக்கான பிரத்யேக இலவச கட்டண பெருந்துகள்:

சென்னை எம்டிசி பேருந்துகள் இனி, மகளிருக்காக பிரத்யேகமாக பிங்க் நிறத்தில் வெளியாக தயாராகி வருவதால், பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் சாலைகளில் இனி பிங்க் பேருந்துகள்; மகளிருக்கான பிரத்யேக இலவச கட்டண பெருந்துகள்:

சமீப காலங்களாக, பெண்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், மகளிருக்கு கட்டணங்கள் இல்லையென்றும், திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து சேவைகள் போன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக மகளிர் பாதுகாப்பாக தனி பேருந்துகளும் விடப்பட்ட நிலையில், அவர்களுக்கு இலவச சேவை என தகவல் வெளியானதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மகளிருக்கான தனிப் பேருந்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில், அதாவது பிங்க் நிறத்தில் வர இருக்கிறது. மகளிருக்கான பேருந்துகள் முன்பே இருக்கும் பட்சத்தில், மகளிருக்கான பேருந்துகள் எதுவென தேடுவது கடினமாக இருப்பதாக பலரால் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பேருந்துகள் பிங்க் நிறத்தில் பேருந்துகள் சாலைகளுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பேருந்துகளில் பயணிப்பதால், சுமார் 1000 ரூபாய் மாதாந்திரம் சேமிக்க முடிகிறது என கூறப்படும் நிலையில், சரியான போர்டுகள் இல்லாததாலும், மகளிர் பேருந்து என்று தெளிவாக எழுதப்படாததாலும், பல முறை பெண்கள் டிலக்ஸ் பேருந்துகளில் ஏறி, கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தனித்துவமாகக் காட்ட  பிங்க் நிற பேருந்துகள் செயலாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "கடந்த ஓராண்டில், 132 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர், மேலும் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த எம்டிசி உள்ளிட்ட பல்வேறு மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு மானியமாக சுமார் ₹1,600 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது” எனக் கூறினார். மேலும், மாநிலத் திட்டக் கமிஷனின் சமீபத்திய ஆய்வை மேற்கோள் காட்டி , அமைச்சர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த திட்டம் வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதம் சுமார் ₹1,000 சேமிக்கவும், குடும்பச் செலவுகளுக்காகப் பயன்படுத்தவும் உதவியது. இருப்பினும், நலத்திட்டம் சாதாரண வகை பேருந்துகளுக்கு மட்டுமே, என்று கூறினார்.

இந்த திட்டத்திற்காக, அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.