தாம்பரம்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு.. திமுக,அதிமுகவினர்  இடையே தள்ளு முள்ளு!!

தாம்பரத்தில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு  என திமுக,அதிமுகவினர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் வாக்கு சாவடி மையத்தில் பரபரப்பு நிலவியது 
Published on
Updated on
1 min read

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையின் போது 47வது வார்டு  அதிமுக வேட்பாளர் சாய் கணேஷ் 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதே வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.கே.பாலாஜி,மற்றும் ஆதரவாளர்கள் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதால் வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் அதிகாரியான இளங்கோவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதே அறையில் இருந்த அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால் இரு  இறுத்தரப்பினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அறையில் இருந்து வெளியேற்றினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com