டிசம்பர் 23...தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

டிசம்பர் 23...தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

தேசிய விவசாயிகள் தினத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விவசாயிகள் தினம்:

தேசிய விவசாயிகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியில் “கிசான் திவாஸ்” என்று அழைக்கக்கூடிய இந்த தினத்தை, விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டௌ வருகிறது.

டிசம்பர் 23 விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?:

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முன்னாள் இந்திய பிரதமர் செளத்ரி சரண் சிங். இவருடைய பிறந்தநாளான டிசம்பர் 23 ஆம் தேதியை தான் ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஏனென்றால், இவருடைய ஆட்சியில் தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக, வேளாண் விளைபொருள் சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதையும் படிக்க: அதிமுக திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக...3 கோடி ரூபாயை வீணடித்தது ஏன்? கேள்வி எழுப்பிய எடப்பாடி!

வாழ்த்து சொன்ன முதலமைச்சர்:

இந்நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதியான இன்று தேசிய விவசாயிகள் தினம் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் மூலம் விவசாயிகளுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், ”உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்!
குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது. சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.