"தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்"  - இந்து மக்கள் கட்சி  வலியுறுத்தல் .

"தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்" - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல் .

திமுக அரசு ஊழல் செய்ததை  நிரூபிக்கும் விதமாக அமைச்சரவையை மாற்றி அமைத்தது.......
Published on

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கோரிக்கை புகார் மனு அளிக்கும் நிகழ்வினை இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் துவக்கி வைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சரவணன் தெரிவித்த போது :- தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒலி எழுப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது பழனியில் காவல்துறை ஒலி எழுப்பதற்கு அனுமதி அளிக்கப்படாததால் கோரிக்கை மனு மட்டும் கோட்டாசியுடன் அளிக்கப்பட்டது எனவும் திமுக அரசு ஊழல் செய்ததை  நிரூபிக்கும் விதமாக அமைச்சரவையை மாற்றி அமைத்ததும், ஊழல் செய்தது நிருபனம் ஆகிறது என்றும் தெரிவித்தார். 

எனவே, இந்தப் பிரச்சினையை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் திமுக ஆட்சியில் கனிமவளக் கொள்ளை படு வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறினார். 

அதோடு, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் திருநெல்வேலியில் விஏஓ கொலை செய்யப்பட்டதையும்சுட்டிகாட்டியும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில் மாநிலச் செயலாளர் சரவணகுமார், சூரிய துரைராஜ் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com