அதிரும் கோவை...ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு...எடப்பாடி சொல்வது என்ன?

அதிரும் கோவை...ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு...எடப்பாடி சொல்வது என்ன?
Published on
Updated on
1 min read

கார்ப்பரேட் கம்பெனி தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பதாக, எதிர்கட்சித்தலைவர் எடப்படி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 

கார்ப்பரேட் கம்பெனி ஆட்சி:

மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து, கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில், அ.தி.மு.க. சார்பில், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது  பேசிய அவர், முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு 18 மாத கால தி.மு.க. ஆட்சியே சான்று என்று சாடினார். மேலும், தமிழ்நாட்டை கார்ப்பரேட் கம்பெனி ஆட்சி  செய்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் முதலமைச்சர்:

தொடர்ந்து பேசிய அவர், கோவையில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டம், தடுப்பணைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக திட்டங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டுவதாக விமர்சித்தார். 

50 ஆண்டு கால வளர்ச்சி:

முன்னதாக  பேசிய  எஸ்.பி. வேலுமணி, அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், 50 ஆண்டு கால வளர்ச்சியை தந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com