தமிழ்நாடு அரசின் மே தின பரிசா ?.... - அரசிடம் ஏஐடியுசி கேள்வி.

 தமிழ்நாடு அரசின் மே தின பரிசா ?.... - அரசிடம்  ஏஐடியுசி  கேள்வி.
Published on
Updated on
1 min read

மீஞ்சூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தொழிற்சாலைகளில் பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும்,  தமிழ்நாடு அரசின் மே தின பரிசா என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியும் கோஷங்கள் எழுப்பினர். 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசைக்  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தொழிலாளர்கள் நீண்ட காலம் போராடி பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை அழிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் தமிழ்நாடு அரசு மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், இந்த மசோதாவானது, மே தின பரிசாக  தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றபட்டதா ?  எனவும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 65ஏ சட்டம் திமுக அரசியல் வரலாற்றிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சட்டம் என்று  கண்டனம் தெரிவித்தனர்.  

தொடர்ந்து, தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com