தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு...!

தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு...!

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், இராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்தும் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க : அடுத்த புதிய சீரிஸை அறிவித்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார்...!

தொடர்ந்து, ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் 98 பேரை முழு நேர தூய்மைப் பணியாளர்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Stale-of Pay) நிலை-2 ரூ.4,100, 12,500 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, 98 தூய்மை பணியாளர்களை முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி அமைத்தும், இதற்காக 39 லட்சத்து 91 ஆயிரத்து 344 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.