

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது வாரத்தில் 4 நாட்கள் கோவில்கள் திறக்கப்படுவதாகவும், வாரம் முழுவதும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.