வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்... சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு...

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்.
வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்... சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு...
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  கடந்த 2018-ம்  ஆண்டு   காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் மற்றும் சுங்கசாவடியில் வாகனங்களுக்கு அதிக வரி வசூல் செய்ததாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சுங்க சவடியில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும், வரி வசூல் செய்ய கூடாது கூறி ஆர்ப்பாட்டத்தின் போது  சுங்கச்சாவடியை அடித்து நொறுக்க பட்ட வழக்கில் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ், நகர செயலாளர் முரளி உள்ளிட்ட 14  பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கானது கடந்த 13 ஆம் தேதி அன்று வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் ஆஜாராகததால் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனை தொடர்ந்து இன்று நீதிமன்ற விசாரணைக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என் 1-ல்  வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட வழக்கில் உள்ள நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com