"மகளிர் உரிமைத்தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது" தமிழக அரசு அறிவிப்பு!

"மகளிர் உரிமைத்தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது" தமிழக அரசு அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை தங்களது நிர்வாகக் காரணங்களுக்காக வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை , சேவை கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்துகொள்வதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு என குறிப்பிட்டுள்ள அமைச்சர்  இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை, வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

மேலும்  தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர். ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்படும் என கூறியிள்ளார். அப்படி வங்கிகள் பிடித்தம் செய்தால்
இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். என்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com