இந்தியாவில் தமிழகத்தில் தான் ஆமை வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆமை வேகத்தில்  தடுப்பூசி செலுத்தப்படுவதாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் ஆமை வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு...

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் தடுப்பூசி தொழிற்சாலை என தடுப்பூசி குறித்து தமிழ்நாட்டில் பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுவதாக விமர்சித்துள்ளார். 

 தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று  மத்திய அரசு  கூறியுள்ளதை ஓபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.   

இதன் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ்,  தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி,  ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.