”ஊட்டச்சத்து நிதியை முறையாக பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு'' - கு.பிச்சாண்டி பெருமிதம்!

Published on

உலக வங்கி ஊட்டச்சத்திற்காக கொடுக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் முறையாக பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, 600க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு 9 வகையான சீர்வரிசைகளை வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலக வங்கி ஊட்டச்சத்திற்காக கொடுக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் முறையாக பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com