
தமிழகத்தில் நிச்சயம் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக, பாஜக சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எச்.ராஜா, அரியலூர் மாணவியின் மரணத்திற்கு மாநில அரசு தான் முழு பொறுப்பு என தெரிவித்தார். சாத்தான்குளம் சம்பவத்தின்போது நேரில் சென்ற திமுகவினர் அரியலூர் மாணவியின் மரணத்திற்கு ஏன் நேரில் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
முதன்முதலாக மதமாற்ற சட்டம் வந்தது மத்திய பிரதேசத்தில் தான், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தான் எனவும் விமர்சித்தார். தமிழகத்தில் நிச்சயம் மத மாற்ற சட்டம் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.