”குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாடு......”  பழனிவேல் தியாகராஜன் கூறியதென்ன!!!

”குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாடு......”  பழனிவேல் தியாகராஜன் கூறியதென்ன!!!

சமூக நீதி கொள்கையால் தான்  உயர்கல்வி, மருத்துவத்துறை, உற்பத்தி என பல நிலைகளில்,  குஜராத்தை விட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது

நிதி வேண்டுமென்றால் பலவகையான கேள்விகளை முன் வைப்போம் என்றும், அதற்கு சரியான பதில்களை கொடுத்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்றும் , நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில், ஜனநாயகம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு இன்று காலை துவங்கியது.  இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, அரசு பதவியேற்கும் போது பல்வேறு நிதி நெருக்கடியில் இருந்தது என்றும், ஆனால் அதை எல்லாம் சரி செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர்,  கடந்த ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம் என்றும், இந்த ஆண்டும் கனிசமான அளவிற்கு வருவாய் பற்றாக்குறை குறையும் என்றும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அமைச்சர் , நிதி வேண்டும் என்றால் அது தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைப்போம் என்றும் , அதற்கு சரியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

சமூக நீதி கொள்கையால் தான்  உயர்கல்வி, மருத்துவத்துறை, உற்பத்தி என பல நிலைகளில்,  குஜராத்தை விட தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார்.

சமூக நீதி கொள்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன சமூக நீதி கோட்பாடுகளை நீண்ட கால அளவில் அது ஏற்ப்படுத்தும்  பலன்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர முடியும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொள்கை பின்பற்றப்படுவதன் காரணமாக தான் குஜராத்தை காட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.

சமூக நீதி கொள்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன சமூக நீதி கோட்பாடுகளை நீண்ட கால அளவில் அது ஏற்ப்படுத்தும்  பலன்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர முடியும் என கூறினார்.

நிதி அமைச்சர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது பத்து நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது.
மீண்டும் மேடையில் பேசத் தொடங்கிய அவர் தமிழகத்தில் தற்போது மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.  மேலும் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் ஒன்று பார்க்க முற்படும்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டது அதேபோல இன்று நாம் சமூகநீதி குறித்து பேசும்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ என நகைச்சுவைடன் பேசினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி.....அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.....