தஞ்சை மாணவி தற்கொலை.. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு - மாணவியின் தந்தை 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு

தஞ்சை மாணவி வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை.. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு - மாணவியின் தந்தை 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு

தஞ்சையில், தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மரித்துவமனையில் அனுமதிக்கப்படு, பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  

இதுதொடர்பாக பள்ளியின் விடுதிக்காப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மதமாற்றம் செய்ய முயன்றதாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாக  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதையடுத்து மகள் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தந்தையின் கோரிக்கையை ஏற்றூ, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.  ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்தநிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, மாணவியின் தந்தை முருகானந்தம், மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளன.