டேங்கர் லாரி கிளீனர் மாரடைப்பால் உயிரிழப்பு : ஆம்புலன்ஸ் தர மறுத்த பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் ...

கரூர் அருகே டேங்கர் லாரி கிளீனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சரியான நேரத்தில் வராதது தான் உயிரிழப்புக்கு காரணம் என கூறி சக லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டேங்கர் லாரி கிளீனர் மாரடைப்பால் உயிரிழப்பு :  ஆம்புலன்ஸ் தர மறுத்த பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் ...

ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கு தினமும் சுமார் 300 டேங்கர் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த லாரி கிளீனர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிர்வாகத்தின் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸிற்கு ஓட்டுநர் இல்லை எனக் கூறி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு கொடுத்த தகவலின்பேரில், அங்கு வந்த மருத்துவ உதவியாளர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நிர்வாகத்திடம் கேட்டபோதே ஆம்புலன்ஸ் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறி ஓட்டுநர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 4 மணி நேரம் சேமிப்பு கிடங்கில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டது.