தேர்வறைக்குள் ஹிஜாப்புக்கு அனுமதி மறுத்த ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 11ம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி மறுத்த பள்ளி ஆசிரியையும் தேர்வு மைய கண்காணிப்பாளருமான சரஸ்வதி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்வறைக்குள் ஹிஜாப்புக்கு அனுமதி மறுத்த ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம்!!

உளுந்தூர்பேட்டையை  அடுத்த  களமருதூர் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகளில், இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் தங்கள் மத வழக்கப்படி ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த சரஸ்வதி என்ற ஆசிரியை, மாணவிகள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வெழுதுமாறு கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமிகள் தேர்வு எழுதிவிட்டு பெற்றோரிடம் சென்று நடந்ததை தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மத விஷயங்களில் தலையிட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல ஹிஜாப் அனுமதிக்க மறுத்த விவகாரத்தை கேள்விபட்ட சிறுபான்மையினரின் பாதுகாவலர் வைகோவும் தனது கடும் கண்டத்தை பதிவு செய்தார்.

மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் ஆசிரியர் சரஸ்வதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்வறைக்குள் ஹிஜாப்புக்கு அனுமதி மறுத்த ஆசிரியை சரஸ்வதி வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சிறுபான்மையின மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.