பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...போக்சோவில் கைது செய்த போலீஸ்...!

பழனி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...போக்சோவில் கைது செய்த போலீஸ்...!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் நட்ராயன். திருமணமான இவர், அதே பள்ளியில் படிக்கும் 10 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை வெளியில் சொல்லமுடியாமலும் பெற்றொரிடம் சொல்ல பயந்து கொண்டும் மாணவி தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாணவியை விடாது துரத்திய ஆசிரியர், மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பலமுறை மாணவியை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாடம் குறித்த சந்தேகம் கேட்க ஆசிரியர் வீட்டிற்கு செல்வதாக மாணவியும் கூறியதால் பெற்றோர் சந்தேகப்படவில்லை என தெரிகிறது.

ஒரு கட்டத்தில் மகள் குறித்து சந்தேகமடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். ஆங்கில ஆசிரியர் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அதனால் அடிக்கடி தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆங்கிய ஆசிரியர் நட்ராயன் மீது ஆயக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் ஆசிரியரை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com