ஆசிரியரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியரின் கோரிக்கைகள் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவாரூரில் தமிழ்நாடு தொக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொராடாச்சேரி ஒன்றியம் சார்பில் எழுபெரும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கெளரவித்தார்.

 இதை தொடர்ந்து விழாவில் பேசிய அவர்,தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் 148 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாகவும், ஆசிரியரின் கோரிக்கைகள் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அதுவரை   ஆசிரியர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

மேலும்  பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக முதல்வர் நவடிக்கை எடுப்பார் என்றும் அன்பில் மகேஷ் உறுதி அளித்திருக்கிறார்.