கோயில் சிலைகளை ஆய்வு செய்ய குழு... தமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவு...

திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
கோயில் சிலைகளை  ஆய்வு செய்ய குழு... தமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவு...
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி 12 குழுக்கள் அமைத்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், திருநெல்வேலி,கோவை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில் சிலைகள் சரியாக இருக்கிறதா உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது..ஒரு குழுவிற்கு 2 முதல் 4 நபர்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு அலுவலர்கள் சிலை வைக்கப்பட்டுள்ள மையம் மற்றும் கோவில்களுக்கு சென்று சிலைகளை ஆய்வு மேற்கொண்டு சிலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது திருடு போயுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை மாதந்தோறும் ஆணையருக்கு அனுப்பி வைப்பதோடு, அதன் நகலை இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், விரைந்து பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com